

இரண்டு சூரிய அஸ்தமனங்களைக் கண்டுள்ளேன் என்று கருணாநிதிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “50 வருடங்களுக்கும் மேலாக மக்களின் மனங்களை ஆட்சி புரிந்த உயர்ந்த தலைவர் மறைந்தது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. இன்று நான் இரண்டு சூரிய அஸ்தமனங்களைக் கண்டுள்ளேன்” என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார்.