’ஆர்.எக்ஸ்.100’ நாயகனை இயக்கும் கிருஷ்ணா

’ஆர்.எக்ஸ்.100’ நாயகனை இயக்கும் கிருஷ்ணா
Updated on
1 min read

’ஆர்.எக்ஸ்.100’ படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா.

ஜூலை 12-ம் தேதி வெளியாகித் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ்.100’. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

தற்போது இப்படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. இவர் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதனை தாணு தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகவுள்ளது. தற்போது இதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in