ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு ஏன்?: தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் விளக்கம்

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு ஏன்?: தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் விளக்கம்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் 'லிங்கா' படத்தின் ஷூட்டிங்கில் அவரை பார்க்க வருபவர்களை அனுமதிக்காததால்,ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக புரளியை கிளப்பி விடுகிறார்கள். கர்நாட‌க மாநிலம் ஷிமோகாவில் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்று வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரி வித்துள்ளார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கும் 'லிங்கா' படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் அருவி, லிங்கனமக்கி அணை, தீர்த்தஹள்ளி மலைப்பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதற்காக அங்கு மிகப்பெரிய‌ சிவன் சிலை,கோயில், அணை மற்றும் கிராமம் போன்ற பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'லிங்கா' பட ஷூட்டிங் காரணமாக ஷிமோகாவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. லிங்கனமக்கி அணை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்துவது ஆபத்தானது. ஜோக் அருவி பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதால் பிளாஸ்டிக் பொருட் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. எனவே 'லிங்கா' ஷூட்டிங் குக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்'' என அங்குள்ள சிலர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினியின் நண்பரும்,'லிங்கா' படத்தின் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷிடம் 'தி இந்து' சார்பாக தொலைபேசியில் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

‘கர்நாடகத்தில் மலைநாடு பகுதியான ஷிமோகா,ஜோக் அருவி,லிங்கனமக்கி அணை உள்ளிட்ட இடங்களில் ஆண்டு தோறும் பல்வேறு மொழி படங் களின் ஷூட்டிங் தொடர்ந்து நடை பெறுகிறது. அப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் வரவில்லை.தற்போது மட்டும் வருவதை வைத்து பார்க்கும்போதே, அவை போலியானது என தெரிய வில்லையா?

நாங்கள் கர்நாடக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளிடம் முறை யான அனுமதி பெற்றுதான் 'லிங்கா' ஷூட்டிங் நடத்தி வருகி றோம். ஷூட்டிங்கிற்காக எவ்வித விதிமுறை மீறல்களும் இங்கு நடைபெறவில்லை. சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. இதே போல முன்பு மைசூரில் ஷூட்டிங் நடந்தபோது சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றது.

திரையுலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரஜினியை பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் யாரையும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அனுமதிப்பதில்லை.

எனவே வெளியே போய் தேவை யில்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு என புரளியை கிளப்பி விடுகின்றனர். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் கர்நாடக அரசின் துணையுடன் ஷிமோகாவில் தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறும்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in