‘காற்றின் மொழி’ அப்டேட்: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியுள்ள ஜோதிகா

‘காற்றின் மொழி’ அப்டேட்: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியுள்ள ஜோதிகா
Updated on
1 min read

ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காற்றின் மொழி’ படத்துக்காக ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஜோதிகா

சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு தரப்பினரும் தங்களுடைய குழுவினரோடு இப்பாடலுக்கு நடனமாடிச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்கள்.

தற்போது இப்பாடலின் உரிமையைப் பெற்று, ‘காற்றின் மொழி’ படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா , லட்சுமி மஞ்சு , சிந்து ஷியாம் , குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா ஆகியோர் நடனமாடியிருக்கிறார்கள்.

‘மொழி’ படத்துக்குப் பிறகு ராதாமோகன் - ஜோதிகா இணை மீண்டும் இப்படத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறது. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் ரீமேக் தான் ‘காற்றின் மொழி’ என்பது குறிப்பிடத்தக்கது.

விதார்த் , லட்சுமி மஞ்சு ஆகியோர் ஜோதிகாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்பு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ட்ரெய்லர் செப்டம்பர் மாதத்திலும், அக்டோபர் 18-ம் தேதி வெளியீடாக ‘காற்றின் மொழி’ திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in