

நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் தர்புகா சிவா.
’ராஜதந்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. அதனைத் தொடர்ந்து ‘மோ’, ‘தொடரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு இசையமைக்கத்தான் ஆர்வம் அதிகம் என்று பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி வந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு முன்பாகவே தர்புகா சிவா இசையில் ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’ ஆகிய படங்கள் வெளியாகின.
நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார் தர்புகா சிவா. இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கவுள்ளார். இதற்காக நடிகர்கள் தேர்வுப் படலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படத்தில் நடிக்கவிரும்பும் நடிகர்கள் 30 நொடிகள் செல்ஃபி வீடியோ மூலம் தங்களை அறிமுகப்படுத்தி mailposhlocal@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறது படக்குழு.