

நமது தேசம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி என்று ஹன்சிகா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆழ்ந்த துயரத்துடன் கலைஞர் டாக்டர் எம் கருணாநிதியின் மறைவைப் பற்றிக் கேட்டறிந்தேன். நமது தேசம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவர். அவரது இழப்பை தாங்கும் வலிமை மற்றும் நம்பிக்கையை அவரது குடும்பத்தினருக்கும், சக தமிழர்களுக்கும் இறைவன் தருவார் என நம்புகிறேன்” என்று ஹன்சிகா தெரிவித்திருக்கிறார்.