கருணாநிதியின் மறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை: விஜய் சேதுபதி புகழாஞ்சலி

கருணாநிதியின் மறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை: விஜய் சேதுபதி புகழாஞ்சலி
Updated on
1 min read

கருணாநிதியின் மறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று விஜய் சேதுபதி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் இதுவரைக் கண்டிராத ஓர் ஈடு இணையற்ற போராளியின் மறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in