

பொது நிகழ்ச்சி என்கிற ஏரியாவில் சிம்ரனைக் காண முடியாது. அப்படிப்பட்டவர், ‘ரெட் லேபிள்’ என்கிற புதிய படத்தின் கதையும் உருவாக்கமும் பிடித்துப்போய் அதன் முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.
பொன்.பார்த்திபன் கதை, திரைக்கதையில், கே.ஆர்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலம் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் லெனின். நாயகியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ் காந்த் நடித் துள்ளனர்.
படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “'ரெட் லேபிள்' என்கிற பெயரைக் கேட்டதுமே டீத்தூள், மது வகை ஆகியவற்றின் வணிகப் பெயர் பலரது நினைவுக்கு வரலாம். ஆனால், அவை இரண்டுமே அல்ல. ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். ஒரு கொலையால், இழந்த அடையாளத்தை மீட்கப் போராடும் சில மனிதர்களின் கதை இது. கோவைதான் கதைக் களம்” என்றார்.