“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” - ஸ்ருதி ரங்கராஜ்

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” - ஸ்ருதி ரங்கராஜ்
Updated on
1 min read

சென்னை: “மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம். நான் என் கணவர் ரங்கராஜ் உடன் உறுதியாக நிற்கின்றேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” என்று ஸ்ருதி ரங்கராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையே நீடித்து வரும் குடும்பப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம் பணம் பறிப்பதும், குடும்பத்தை நாசமாக்குவதும் தான்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-ல் ஜாய் கிரிஸில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொணர்கிறது.

அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்துக்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பதுதான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாக உள்ளது.

அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில், "எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.

அந்தக் affirmation-ல் சில பகுதிகள்: பிரிவு 4: என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும். பிரிவு 6: ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும். பிரிவு 8: ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும் மற்றும் ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும். பிரிவு 9: இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும். பிரிவு 12: ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும். இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம்.

பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜ் உடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in