வசூல் வரவேற்பில் ‘ஆண்பாவம் பொல்லாதது’: படக்குழுவினர் மகிழ்ச்சி

வசூல் வரவேற்பில் ‘ஆண்பாவம் பொல்லாதது’: படக்குழுவினர் மகிழ்ச்சி
Updated on
1 min read

‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அக்டோபர் 31-ம் தேதி ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்துக்கு வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் சின்ன திரையரங்குகள், குறைந்த காட்சிகள் என வெளியானது. ஆனால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அனைத்து பெரிய திரையரங்குகளிலும் இப்படத்தினை மாற்றியிருக்கிறார்கள். மேலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தினால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்து வருகிறது. டிக்கெட் புக்கிங் தளத்தில் ஒரு மணி கணக்கின்படி ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்தின் இறுதி வசூல் நிலவரப்படி, ரியோ ராஜ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். முதல் மூன்று நாட்களிலேயே மொத்த வசூல் 5 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் மாளவிகா மனோஜ், ஷீலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் ரியோ ராஜ் உடன் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தினை ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டுள்ளது ஏஜிஸ் நிறுவனம்.

Aan Paavam Pollathathu had a brilliant Saturday and showcasing has increased for Sunday. Super happy to see audience supporting the next generation, new film makers and good engaging content https://t.co/CT6VOQtq1r

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in