காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
Updated on
1 min read

சென்னை: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று (அக்.31) சென்னை போயஸ் கார்டனில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு வீட்டார், உறவினர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்), இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in