

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக ‘பைசன்’ திரைப்படம் ரூ.55 கோடி வசூலித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’. இதில் துருவ், பசுபதி, ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்த படம் முதலில் மெதுவாக தொடங்கி நான்கு நாட்களுக்குப் பிறகு அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் வாரத்தில் புக்மைஷோ தளத்தில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்துக்கே அதிக டிக்கெட் விற்பனை ஆன நிலையில், கடந்த ஒரு வாரமாக ‘பைசன்’ படத்தின் டிக்கெட் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. வாய்வழி பாசிட்டி விமர்சனங்கள் காரணமாக திரைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இப்படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடகஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
Ecstatic beyond measure and thankful beyond words!! #BisonKaalamaadan is unstoppable as he's breaking those barriers right away!!
55 Crores Worldwide in 10 days!! #Blockbuster Raid in the Theatres Near You! @applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal… pic.twitter.com/ozbbqRLl7S