

இது பகைமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல என்று மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்காததிற்கு விஜய் சேதுபதி எனது எதிர்ப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இது பகைமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல, தமிழகத்தின் முதல்வராக 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் என்ற முறையிலும் தமிழுக்கும் மக்களுக்கும் அவர் வாழ்நாள் முழுதும் சேவை செய்த தலைவர் என்ற வகையிலும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.