

‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’. நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிவழகன் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். அக். 31-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில், ‘திருக்குறள்’ இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பேசும்போது, ” இந்தப்படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலகளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டன, சினிமா தடை செய்யப்பட்டது. அந்த வகையில். தடை அதை உடை எனும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள். எண்பதுகளில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள். இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள். இப்படக்குழுவினர் பெரும் உழைப்பில் படத்தை எடுத்துள்ளனர்” என்றார்.