நெஞ்சில் டாட்டூ உடன் அஜித் - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நெஞ்சில் டாட்டூ உடன் அஜித் - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
Updated on
1 min read

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது. துபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்சிலோனாவில் நடந்த கார் பந்​த​யத்​தில் அண்மையில் பங்​கேற்​றது.

சில தினங்களுக்கு முன்பு பார்சிலோனாவில் தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் விசில் அடித்து ரகளை செய்ததால் கோபமடைந்த அஜித், அவர்களை நோக்கி விரலை அசைத்​து, ‘அமை​தி​யாக இருங்​கள்’ என்ற சைகை செய்​தார். உடனே ரசிகர்​கள் ஆரவாரத்தை நிறுத்தி அமை​தி​யா​னார்​கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளார். கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூதானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in