துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14 ரிலீஸ்!

துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14 ரிலீஸ்!
Updated on
1 min read

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இந்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘லோகா’ படம் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக ‘காந்தா’ படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இந்தத் தொடரை இயக்கியவர் தான் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். இப்போது ‘காந்தா’ படத்தை அவர் இயக்குகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in