சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘ரூம் பாய்’

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘ரூம் பாய்’
Updated on
1 min read

அறிமுக நடிகர் சி.நிகில் ஹீரோவாக நடிக்கும் படம், ‘ரூம் பாய்’. இதில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தை, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறக்கிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது கதை. திரைக்கதை பரபரப்பாக இருக்கும். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் முதல் தோற்ற போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இரண்டாவது லுக்கை ‘96’, ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம்குமார் வெளியிட்டுள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in