பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல்!

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல்!
Updated on
1 min read

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘டியூட்’. சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டிராவிட் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்தை அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்​கி​யுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்​ப​திவு செய்துள்ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு அக்.17-ம் தேதி இப்படம் வெளியானது.

தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல்நாள் உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலித்தது. இதனைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘டியூட்’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் இப்படம் ரூ.100 கோடி தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த வெற்றி தொடர்பாக பிரதீப் ரங்கநாதன், “தெலுங்கில் ‘டியூட்’ திரைப்படம் ‘டிராகன்’ படத்தை விட 4-5 மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகிறது. தமிழிலும் ‘டிராகன்’ படத்தை விட முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த வசூலை எல்லாம் விட மக்கள் ரசித்து வருவதை தான் முக்கியமாக பார்க்கிறேன். திரையரங்குகளில் பல காட்சிகளுக்கு பார்வையாளர்கள் சிரிப்பதையும், கத்துவதையும் பார்க்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

DUDE DIWALI BLAST is unstoppable at the box office with massive love from the audience #Dude collects a gross of 45 CRORES WORLDWIDE in 2 days & going super strong

Book your tickets now and celebrate #DudeDiwali
https://t.co/JVDrRd4PZQ

https://t.co/4rgutQNl2npic.twitter.com/TLNPYTpNsV

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in