‘தலைவர் தம்பி தலைமையில்’ டீசர் எப்படி? - “கண்டிசன்ஸை ஃபாலோ பண்ணுங்கடான்னு சொன்னேனே…”

‘தலைவர் தம்பி தலைமையில்’ டீசர் எப்படி? - “கண்டிசன்ஸை ஃபாலோ பண்ணுங்கடான்னு சொன்னேனே…”
Updated on
1 min read

சென்னை: ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். தற்போது இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். இதில் பிரார்த்தனா, மீனாட்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்து வருகிறார். முழுக்க காமெடி கலந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் நிதிஷ் சஹாதேவ். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - வளரும் அரசியல்வாதியாக வரும் ஜீவா திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகிறார். அங்கே நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையாக காட்சிப் படுத்துகிறது டீசர். மொத்த படமும் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்பதை டீசரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.

டீசரில் ஜீவா பேசும் “கண்டிசன்ஸை ஃபாலோ பண்ணுங்கடா.. “கண்டிசன்ஸை ஃபாலோ பண்ணுங்கடான்னு சொன்னேனே” என்ற வசனம் படத்தில் அரசியல் நையாண்டியும் இடம்பெறும் என்பதை காட்டுகிறது. ‘தலைவர் தம்பி தலைமையில்’ டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in