ஹாரர் காமெடியில் ‘ரஜினி கேங்’!

ஹாரர் காமெடியில் ‘ரஜினி கேங்’!

Published on

‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’.

இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மிஸ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் ரஜினி கிஷன் தயாரித்துள்ளார்.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், எதிர்பாராதவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும்தான் கதை. கலகலப்பான திரைக்கதையுடன், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in