

‘கழுகு 2’ படத்தைத் தொடர்ந்து, ‘திரு.குரல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கிருஷ்ணா.
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கழுகு 2’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
அப்படத்தைத் தொடர்ந்து ’திரு.குரல்’ என்ற பெயரில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கிருஷ்ணா. இதனை சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பிரபு இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நாயகி மற்றும் இதர நடிகர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இசையமைப்பாளராக சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, எடிட்டராக வெங்கட் ரமணன் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தற்போதே கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.