

நமக்கு ஓர் இருண்ட தினம் இது என்று கருணாநிதிக்கு ராதிகா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமக்கு ஓர் இருண்ட தினம் இது. இந்த உயர்ந்த தலைவரைப் பற்றிய நினைவுகள் தான் என் மனதிலும், நினைவிலும் நிறைந்துள்ளன. தமிழர்களின் பெருமையை நிறுவி, அதற்காகப் போராடியவர். அவரது ஆன்மா என்றும் வாழும். அவரது இழப்பு கண்டிப்பாக என்னைப் பாதிக்கும். உயர்ந்த, பெருமைக்குரிய ஒரு தலைவர் மறைந்துவிட்டார். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி” என்று ராதிகா தெரிவித்திருக்கிறார்.