2 காலகட்டங்களில் நடக்கும் ‘மெல்லிசை’

2 காலகட்டங்களில் நடக்கும் ‘மெல்லிசை’
Updated on
1 min read

‘வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் அடுத்து இயக்கும் படம், ‘மெல்லிசை’. ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அப்பா -மகள் அன்பைச் சொல்லும் படமாக உருவாகிறது. இதில் கிஷோர் அப்பாவாகவும் சுபத்ரா ராபர்ட் நாயகியாகவும் நடிக்கின்றனர். ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“காதல், லட்சியம், தோல்வி, வெற்றி, வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாகப் பேசும் படம் இது. 2 காலகட்டங்களில் நடக்கும் இது மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றிப் பேசுகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in