கவுதம் ராம் கார்த்திக் படத்துக்கு பிரம்மாண்ட கோயில் செட்!

கவுதம் ராம் கார்த்திக் படத்துக்கு பிரம்மாண்ட கோயில் செட்!
Updated on
1 min read

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு பிரம்மாண்ட கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான கவுதம் கார்த்திக், தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ என பல படங்களில் நடித்தார். இப்போது தனது பெயரை கவுதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ள அவர் நடிக்கும் படத்தை, கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சிவகாசி அருகே நேற்று தொடங்கியது. அங்கு குலசேகரபுரம் பகுதியில் பிரம்மாண்ட கோயில் செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. “கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி, காஷ்மீர் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற உள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்பட நிறுவனம் இதற்கு முன் பிரபுதேவா - வடிவேலு - யுவன்சங்கர்ராஜா கூட்டணியில் படம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in