பெங்களூருவில் ‘த டாக்ஸிக்’ கடைசிக் கட்ட படப்பிடிப்பு!

பெங்களூருவில் ‘த டாக்ஸிக்’ கடைசிக் கட்ட படப்பிடிப்பு!
Updated on
1 min read

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கும் இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர்.

கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி பணியாற்றியுள்ளார். இந்தப் படத்துக்கான ஆக் ஷ‌ன் காட்சிகளின் படப்பிடிப்பு, மும்பையில் 45 நாட்கள் நடந்தது.

இந்திய சினிமாவுக்கு இந்த ஆக்‌ஷன் காட்சிகள் புதுமையாக இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பெங்களூருவில் நடக்க இருக்கிறது. அதோடு ஷூட்டிங் முடிவடைகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in