யானைக்கும் சிறுவனுக்குமான அன்பைச் சொல்லும் ‘கும்கி 2’!
யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய படம், ‘கும்கி’. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு
செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இணைந்து தயாரித்துள்ளனர். பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.
குழந்தைக்கும், யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் கதை.
இயற்கை, மனிதன், யானைகளின் உறவுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
