இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு

இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
Updated on
1 min read

இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த சூழலில் ‘செப்டம்பர் 5’ இயக்குநர் ஹெச்.வினோத்தின் என்பதால் ஜனநாயகன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர்.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குநராக திரை உலகின் ஹெச்.வினோத் அறிமுகமானார். தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கினார். அஜித் உடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். இந்த சூழலில் தற்போது விஜய்யை இயக்கியுள்ளார்.

Another year, yet Vin-oth-er reason to celebrate him

Team #JanaNayagan wishes our Director #HVinoth a very Happy Birthday #HappyBirthdayHVinoth
https://t.co/boneRRSepC#Thalapathy @actorvijay sir @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraajpic.twitter.com/8WpHPwplNr

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in