

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன்.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் தனுஷ் உடன் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முழுவதும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பன் உதயநிதியின் புதிய பயணத்துக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி கையிலெடுத்திருக்கிறார். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.
IdliKadai – releasing across Tamil Nadu by @RedGiantMovies_
Wishing Inban Udhayanidhi the very best on his new journey! pic.twitter.com/gFUTJgbFwm