விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?

விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?

Published on

விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டு தற்போது விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர் விஷ்ணு எடவன். லோகேஷ் கனகராஜிடம் பல்வேறு படங்களுக்கு இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவருடைய இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிக்க புதியபடமொன்று தொடங்கப்பட்டது.

அதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ‘எல்.ஐ.கே’ முடிந்தவுடன் தான் லலித்குமார் இதன் படப்பிடிப்பினை தொடங்குவார் எனத் தெரிகிறது. இதனிடையே, குறுகிய கால தயாரிப்பாக விக்ரமின் படத்தினை முடித்துவிட்டு, கவின் படத்தைத் தொடங்க விஷ்ணு எடவன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in