விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ அக்.31-ல் ரிலீஸ்!

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ அக்.31-ல் ரிலீஸ்!
Updated on
1 min read

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. அக்டோபரில் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளார்கள்.

அக்டோபர் 31-ம் தேதி வெளியீடு குறித்து விஷ்ணு விஷால், “நேரம் மனிதனை சோதிக்கும் என்பார்கள். அப்படித்தான் என்னை 34 மாதங்கள் சோதித்தது. இந்த அக்டோபரில் என் வலிமையுடன், என் உள்ளார்ந்த சினிமாவோடு திரும்பி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார் விஷ்ணு விஷால். அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு சுபாஷ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘ஆர்யன்’ பணிகளை முடித்துவிட்டு, ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால். அதனை முடித்துவிட்டு அருண்ராஜா காமராஜ், சதீஷ் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

#Aaryan - They say time tests you. 34 months tested me. This October, I'm back with my strength, my core, my cinema.

See you in theatres on October 31st. pic.twitter.com/OMKNPtfu5K

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in