ஜெய்யின் ‘ஒர்க்கர்’ படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

ஜெய்யின் ‘ஒர்க்கர்’ படப்பூஜையுடன் பணிகள் தொடக்கம்

Published on

ஜெய் நாயகனாக நடிக்கும் ‘ஒர்க்கர்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் புதிய படம் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் நாயகனாகவும், ரீஷ்மா நனையா நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். வினய் கிருஷ்ணா இயக்கவுள்ள இப்படத்தில் யோகி பாபு, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அஞ்சி, இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in