பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - ரசிகர்கள் ஏமாற்றம்
ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா’. இப்படத்தின் மாஸான காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் படமும் வசூலில் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.
இப்படம் முதலில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இறுதி கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்று படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’அகண்டா 2’ வெறும் திரைப்படமாக இருக்காது, அது ஒரு சினிமா திருவிழா போல இருக்கும் என்று படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.25 படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருந்த பாலகிருஷ்ணா ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
#Akhanda2 - AN IMPORTANT ANNOUNCEMENT.#Akhanda2Thaandavam
'GOD OF MASSES' #NandamuriBalakrishna #BoyapatiSreenu @AadhiOfficial @MusicThaman @14ReelsPlus @iamsamyuktha_ @RaamAchanta #GopiAchanta #MTejeswiniNandamuri @kotiparuchuri @ivyofficial2023 pic.twitter.com/3cKUSuehyS
