விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ டீசர் எப்படி? - 2040-ல் ஒரு காதல் கதை!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ டீசர் எப்படி? - 2040-ல் ஒரு காதல் கதை!
Updated on
1 min read

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் உருவாகி உள்ள எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) படத்தின் டீசர் வெளியாகி உளள்து. தீபாவளி வெளியீடாக, வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் எப்படி? - 1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட இந்தப் படத்தின் டீசரில் இந்த கதை 2040-ல் நடைபெறும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. எதிர்கால சென்னை எப்படி இருக்கும் என தனது கிரியேட்டிவிட்டியை ஏகத்துக்கும் அள்ளி தெளித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அடையாறு பாலம், மிஷன் இம்பாஸிபிள் - 14, மின் வாகன பயன்பாடு, ‘ரன்னிங், டெக்ஸ்டிங், சைக்கிளிங்’ செல்பவர்களுக்கு என பிரத்யேக பாதை, தலைவர் 189 படம், நவீன வடிவில் காட்சி அளிக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.

கண்டதும் காதலில் மூழ்கும் காதலர்கள் எப்படி பல்வேறு தடைகளை கடந்து வாழ்க்கையில் இணைகிறார்கள் என்பதை தனது பாணியில் சொல்லி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் தங்களது வழக்கமான பாணியில் டீசரில் வரும் ஃப்ரேம்களில் ஸ்கோர் செய்துள்ளனர். இதில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>டீசர் வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in