இன்ஸ்டாகிராமில் மைல்கல்லை எட்டிய விஜய்யின் செல்ஃபி வீடியோ

இன்ஸ்டாகிராமில் மைல்கல்லை எட்டிய விஜய்யின் செல்ஃபி வீடியோ
Updated on
1 min read

விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகமெங்கும் இருந்து சுமார் 10-15 லட்சம் பேர் வரை கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல்வேறு நபர்கள் மாநாட்டு திடலில் இருந்து, மாநாட்டுக்கு முன்பும் – பின்பும் வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டு வந்தார்கள். அந்தளவுக்கு மாநாட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

மாநாட்டு திடலுக்கு விஜய் வந்தவுடன் அங்கிருந்த நடைபாதையில் நடந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். அப்போது தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்துக் கொண்டார். இதனை 22-ம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார் விஜய். இந்தப் பதிவு மாபெரும் சாதனையை எட்டியிருக்கிறது.

விஜய்யின் செல்ஃபி வீடியோ இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. மேலும் 10 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் அரசியல் சார்ந்த பதிவொன்றுக்கு இவ்வளவு பார்வைகளும், லைக்குகளும் பெற்றிருப்பது விஜய்யின் பதிவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தென்னிந்திய நடிகர் ஒருவரின் பதிவுக்கு இந்தளவுக்கு வரவேற்பு பெற்றிருப்பதும் விஜய்யின் பதிவுக்கு தான் என்பது நினைவுக் கூரத்தக்கது.

A post shared by Vijay (@actorvijay)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in