அஜித்தின் 64-வது படம் எப்படியிருக்கும்? - ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

அஜித்தின் 64-வது படம் எப்படியிருக்கும்? - ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
Updated on
1 min read

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்க இருக்கிறார். இந்த தகவலை அவர் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதில் மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக், அஜித்தின் 64வது படம் குறித்து தெரிவித்துள்ளார். “குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

அஜித்தின் 64-வது படம் அனைவருக்குமான படமாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அது அவர் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்” என்றார். படத்தை 2026-ம் ஆண்டு கோடையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in