‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்

‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in