கூலியை இணையதளங்களில் வெளியிட தடை

கூலியை இணையதளங்களில் வெளியிட தடை
Updated on
1 min read

நடிகர் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், கூலி. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.14 அன்று வெளியாகிறது.

இந்தப் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, காப்பிரைட் சட்டத்தின் கீழ் சன் பிக்சர்ஸின் அங்கமான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், கூலி படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என தடை விதித்து பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல், ஹாத்வே, டாடா, வோடோபோன், ரிலையன்ஸ் உள்ளிட்ட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், தனியார் கேபிள் டிவி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in