

சத்துணவுப் பணியாளரை இடமாற்றம் செய்த அரசு அதிகாரியை என்ன பண்ணப் போறோம்? என்று இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரில் சத்துணவுப் பணியாளராக அமர்த்தப்பட்ட பெண் பணியாளர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், அவரை மாற்றக் கோரி ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்குப் பணிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பணியாளரை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம்..திரும்பவும் அந்தப் பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ?. இவங்களை இடமாற்றம் செய்த அரசு அதிகாரியை என்ன பண்ண போறோம்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.