ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்

ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்
Updated on
1 min read

அட்லி உதவியாளரின் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகன் அர்ஜித். இவர் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்டு வந்தார்கள். இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள்.

இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. அக்கதைக்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றி வருகிறார் அர்ஜித்.

ஏற்கெனவே ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மகன் அர்ஜித்தும் ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அர்ஜித் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in