சூர்யாவின் ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சூர்யாவின் ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Updated on
1 min read

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனது திறனை நிரூபித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. பட பூஜை, போட்டோ ஷூட், படப்பிடிப்பு என படத்தின் பணிகள் அடுத்தடுத்து வேகமெடுத்தது. இதில் நாயகனாக சூர்யா நடிக்கிறார். அவர் நடிக்கும் 45-வது படம் என்பதால் இந்த படம் ‘சூர்யா 45’ என முதலில் அறியப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘கருப்பு’ என படத்தின் தலைப்பை அறிவித்தது படக்குழு.

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் சூர்யா கருப்பு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நடந்து வருகிறார். அதன் பின்னணியில் கோயில் திருவிழா கொண்டாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in