எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து இயக்கி வரும் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கில்லர்’ படத்தின் இயக்குநராக திரும்பியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தினை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு திரையுலகினர் பலரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக இருக்கிறது. இதற்காகவே பிரம்மாண்ட ஸ்போட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

EN ANBUM AARUYIRUMAANA Fans & Friends Presenting U the #KillerFirstLook as My Birthday gift to all of U , Tomorrow Morning all of U keep me in your prayersand I will keep U all in my prayers as always sjs @arrahman@GokulamGopalanpic.twitter.com/t1UChrRNhe

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in