

‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. தற்போது இப்படக்குழு மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரியவுள்ளது. இது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இதனை தயாரிக்கவுள்ளார். அப்படத்தில் இயக்குநர் மணி வர்மனின் பணியைப் பார்த்து, அவருக்கு அடுத்த பட வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையினை எழுதியிருக்கிறார். இக்கதை சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட உள்ளது.
முழுக்க துப்பறியும் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது. இதில் தமன் அக்ஷன் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த க்ரைம் திரில்லர் படத்தில் எமோஷனல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த கதையாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.