கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்

கவினின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.

‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள கவின். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இதுவாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் கவின் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Prince Pictures' next - joining hands with @Kavin_m_0431 and director @Dir_RamSangaiah for a new project - #ProductionNo18.

Produced by @lakku76.
Co Produced by @venkatavmedia. pic.twitter.com/gEB0DyKRqq

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in