மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு

மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
Updated on
1 min read

பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மீண்டும் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜீவா உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினோய் பணிபுரியவுள்ளார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க இருக்கிறார்.

‘ஃபேலிமி’ இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள படத்தை முடித்துவிட்டார் ஜீவா. அடுத்ததாக கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கவுள்ள படத்துக்குதான் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.

And it begins… #Jiiva46
Overflowing with gratitude and excitement as we kickstart a brand new journey today with the Pooja of my next film! #Blackmovie fame @kgbalasubramani & @gokul_benoy creative team , we’re coming together once again in association with… pic.twitter.com/xLyZQnSjGk

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in