

‘பெரியார் குத்து’ பாடலை பாடியது மட்டுமன்றி, ஆடவும் செய்திருக்கிறார் சிம்பு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த ‘செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. அதனைத் தொடர்ந்து ‘90 Ml’ படத்தின் பின்னணி இசையில் கவனம் செலுத்தி வந்தார்.
பின்னணி இசையமைப்புக்கு இடையே ‘பெரியார் குத்து..’ என்ற தலைப்பில் உருவான பாடலையும் பாடியிருந்தார் சிம்பு. ரமேஷ் தமிழ்மணி இசைமைக்க மதன் கார்க்கி அப்பாடலை எழுதியுள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்கள்.
முதலில் இப்பாடலை பாட மட்டுமே செய்திருந்தார் சிம்பு. தற்போது அப்பாடலுக்கு நடனமாட சம்மததித்திருக்கிறார். இதனை சென்னையில் அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடலை சமூகவலைத்தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.