

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இன்று (ஜூலை 28) நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை தனுஷ் ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியில் பால்கி இயக்கத்தில் உருவான ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். தற்போது தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ். அன்பான நண்பர். வெற்றி மற்றும் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘வடசென்னை’ படத்தின் ட்ரெய்லரை இன்று (ஜூலை 28) வெளியிடவுள்ளனர். மேலும், அவரது நடிப்பில் ‘மாரி 2’ படமும் உருவாகி வருகிறது.