மீண்டும் ஹீரோவானார் சரவணன்!

மீண்டும் ஹீரோவானார் சரவணன்!
Updated on
1 min read

‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். 18 கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.

“இந்த வெப் தொடர், குரலற்றவர்களின் குரல் எனும் கருத்திலிருந்து உருவாகி இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அதை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனுக்காகவும் நிற்கும் சாதாரண மனிதரின் கதைதான் இது.

மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் முக்கியமான மெசேஜ் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in