தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா!

தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா!
Updated on
1 min read

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்துக்கான அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் ஷிவம் டுபே, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை ஷிவம் டுபே வெளியிட்டார். ஏற்கெனவே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆன நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழில் ஹீரோவாக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Welcoming Chinna Thala @ImRaina on board for #DKSProductionNo1! @Logan__you @Music_Santhosh @supremesundar @resulp @muthurajthangvl @sandeepkvijay_ @saravananskdks @TibosSolutions @kgfsportz #sureshraina #chinnathala #dreamknightstories pic.twitter.com/8FnkmNdIeY

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in