ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! - படக்குழு அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! - படக்குழு அறிவிப்பு
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஹரிப்ரியா, பிந்து மாதவி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மு.மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிளாக்மெயில்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இதனை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மென்டல் மனதில்’ படத்தில் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

We are happy to announce our 1st production movie #Blackmail A Gripping Thriller Drama Confirmed as August 1st Release#BlackmailfromAug1@gvprakash @jds_filmfactory @sanlokesh @SamCSmusic @gokulbenoy @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh @teju_ashwini_ @haripriyaaIsai pic.twitter.com/4qjSiDLxyY

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in