‘அடுத்து இயக்கம் தான்’ - பிரதீப் ரங்கநாதன் முடிவு

‘அடுத்து இயக்கம் தான்’ - பிரதீப் ரங்கநாதன் முடிவு
Updated on
1 min read

அடுத்து ஒரு படம் இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகியிருக்கிறார்கள்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் தரப்போ அடுத்து படம் ஒன்று இயக்கி நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு தான் நாயகனாக நடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள். சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in